வெள்ளி, 14 நவம்பர், 2008

தமிழக உதவிப் பொருட்கள் சிறீலங்கா அரசு மூலமே விநியோகம்


தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்கள் தங்களின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என இந்தியாவில் வைத்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதரகத்தின் ஊடாக செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாகவே மக்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் நின்றுகொண்டு மகிந்த ராஜபக்ச தங்களின் ஊடாகவே வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் சிறீலங்கா அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறியுள்ளார். சிறீலங்கா ஜனாதிபதியின் கருத்தை கேள்விப்பட்டு, இலங்கைத் தமிழ் மக்களுக்கு என வழங்கப்பட்ட தமது உதவிகள் சிங்கள மக்களையும் இராணுவத்தினரையும், சென்றடையப் போகின்றது என்ற அச்சம் தமிழக மத்தியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: