திங்கள், 5 ஜனவரி, 2009

100 படையணிகள்- 50 ஆயிரம் படையினர்- 6 ரெஜிமெண்டுகளுடன் முல்லைத்தீவுக்கு செல்கிறோம்: சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள முல்லைத்தீவை ஆக்கிரமிக்க 100 படையனிகள்- 50 ஆயிரம் படையினர்- 6 ரெஜிமெண்டுகளுடன் செல்லப் போகிறோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமான த நேசனுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
வன்னிப் போர்க்களத்தில் ஈழப் போர் - 4 இல் மிகப் பெரிய சமராக முல்லைத்தீவு சமர் இருக்கும்.
பிரபாகரனுக்கு இரண்டே வழிகள் தான் இப்போது உள்ளன. ஒன்று நாட்டைவிட்டு தப்பியோட வேண்டும். அல்லது தற்கொலை செய்ய வேண்டும். பிரபாகரனை உயிரோடு பிடிப்பது என்பது மிக அதிக சாத்தியமற்றது.
சிறிலங்கா படையானது ஆனையிறவை நோக்கி நகர்கிறது. பரந்தன் மற்றும் முல்லைத்தீவு இடையேயான ஏ-35 வீதியில் முரசுமோட்டையை இலக்கு வைத்திருக்கிறோம்.
விடுதலைப் புலிகளை மீண்டும் ஒன்று சேர விடமாட்டோம் என்றார் சரத் பொன்சேகா.

கருத்துகள் இல்லை: