ஞாயிறு, 2 நவம்பர், 2008

நாகர்கோவில் கடற்பரப்பில் டோறா மற்றும் ஹேவர்கிராப் கடற்கலன்கள் மூழ்கடிப்பு


நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா கடற்படையினருக்குச் சொந்தமான டோறா அதிவேகப் பீரங்கிப் படகு ஒன்றும், ஹோவர்கிராவ் படகு ஒன்றுத் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு நிருந்து விசைப்படகு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.


சிறீலங்கா கடற்படையினரின் சுப்பர் டோறா பீரங்கிப் படகு (Super Dvora)

இன்று சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் சிறீலங்கா கடற்படையினரின் 20 டோறா பீரங்கிப் படகும், ஹொவர்கிராப் படகும் உள்ளடங்கிய கடற்கல தொகுதி மீது கடற்புலிகள் அதிரடித் தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.


சிறீலங்கா கடற்படையினரின் எம்-10 ஹோவர்கிராப் (ABS M-10 Hovercraft)

இதன்போ டோறா பீங்கிப் படகும், ஹோவர்கிராப் மிதக்கும் படகும் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே காலை 7 மணி வரை கடற் சமர் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹோவர்கிராப் படையினரை தரையிறக்குவதற்கும் கடல் சண்டைக்கான விநியோகத்தையும் மேற்கொள்ளும் மிதக்கும் படகு ஆகும். கடலிலும் அதேநேரம் கடற்கரையிலும் கரையேறும் ஆற்றல் கொண்டது.



படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்து கடற்பரப்பை நோக்கி வான் தாக்குதல்களும், எறிகணைத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: